வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்க வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் கிளிநொச்சியில் தற்போது (இன்று திங்கட்கிழமை) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணைந்தே இந்தப் பேரணியை முன்னெடுத்துள்ளன.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக காலை 09.00 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை உள்ளிட்டவர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Monday, May 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment