Tuesday, May 16, 2017

தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேசுகிற நடிகைகளெல்லாம் கொடி பிடித்தால், கோடம்பாக்கம் கதி அதோகதிதான்!

சமீபகாலமாக எனக்கு நல்லா தமிழ் தெரியும். இங்கேயே பிறந்து வளர்ந்தவதான். வாய்ப்பு கொடுங்கப்பா... என்று குரல் கொடுக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை பெருகி வருவது நல்ல சகுனமே.. அந்த வகையில் பாண்டிச்சேரி பெண்ணான ஸ்ரீபிரியங்கா ஒரு நல்ல இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க... அதே அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார் இன்னொரு தமிழச்சியான லட்சுமி பிரியா.

ஏராளமான தமிழ் சீரியல்களில் நடித்திருக்கும் இவர், சுட்டக்கதை படத்தின் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர். அதற்கப்புறம் வந்த வாய்ப்புகள் ஏதும் லட்சுமி பிரியாவின் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. இந்த நேரத்தில்தான் ஸ்ரீபிரியாங்கா போல, நான் தமிழ்பொண்ணு என்று குரல் உயர்த்த ஆரம்பித்திருக்கிறாராம். எவ்வளவுதான் கதறினாலும், அடுத்த வீட்டு நல்லெண்ணைக்குதான் மணம் அதிகம் என்று மன்றாடுகிறது கோடம்பாக்கம். என்ன செய்ய?

0 comments :

Post a Comment

 
Toggle Footer