எழுபது நாட்களுக்கும் மேலாக வடக்கு- கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, போராட்டங்களில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய், தந்தை உள்ளிட்ட உறவினரும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரையும் ஒன்றிணைத்து அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
Home
»
Sri Lanka
»
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும்- சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு!
Monday, May 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment