Tuesday, May 2, 2017

வல்லகோட்டை, கனகவேல் காக்க, முரண் போன்ற சில பல தமிழ் படங்களில் தலை காட்டியிருந்தாலும், கன்னடத்தில் நல்ல இடத்தை கொடுத்து வைத்திருக்கிறார்கள் ஹரிப்ரியாவுக்கு.

தமிழை நசுக்காமல் பேசும் நடிகைகளில் ஹரிப்ரியாவுக்கு முதல் மார்க் கொடுக்கிற அளவுக்கு நன்றாக பேசுகிறார். இப்படி அவருக்கும் தமிழுக்குமான தொடர்பை உயிர்ப்போடு வைத்திருக்க நினைத்திருக்கலாம். இங்கிருந்து போய் கதை சொன்ன தமிழ் இயக்குனர் ஆதிராமுக்கு, அவரே கன்னடத்தில் வாய்ப்பும் வாங்கிக் கொடுத்தார்.

ரணதந்திரா என்ற பெயரில் உருவான அப்படத்தை இப்போது தமிழில் சிலந்தி2 என்ற பெயரில் ரிலீஸ் செய்கிறார்கள். எப்ப வேணா பிரமோஷனுக்கு கூப்பிடுங்க. வர்றேன் என்று கூறியிருக்கிறார் ஹரிப்ரியா. இவரது தமிழ்ப்பற்று கன்னட வெறியர்களுக்கு தெரியுமா என்பதுதான் டவுட்டோ டவுட்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer