திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு புதிய நிர்வாக அதிகாரியாக தமிழக
ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கலாம் என உச்சநீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர்
தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாக அதிகாரியாக கேரள
ஐஏஎஸ் அதிகாரி சதீஷ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவர்
தொடர்பான வழக்கில் விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம்
நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம்
கூறுைகயில் தமிழகத்தை சேர்ந்தவரும் கேரள ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் ஆர்.
கண்ணன் அல்லது கேரள முன்னாள் தலைமை செயலாளர் நீலா கங்காதரன் ஆகியோரில்
ஒருவரை புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என
தெரிவித்திருந்தார். இதில் புதிய நிர்வாக அதிகாரியாக கண்ணன்
நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Home
»
Tamizhagam
»
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு புதிய நிர்வாக அதிகாரியாக தமிழக ஐஏஎஸ் அதிகாரி?
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment