எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி 2 படத்திற்கு உலகம் முழுக்க கிடைத்த வரவேற்பு இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது.
இனிமேல் இது போன்ற சரித்திரக் கதைகள் இன்னும் பல கோடி ரூபாய் முதலீட்டுடன் வரக்கூடும் என்கிறார்கள்.
அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள், தங்கள் தலைவரை போர்ஸ் பண்ண ஆரம்பித்த கதையும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்துவிட்டாது.
“தலைவா.... ராஜமவுலி டைரக்ஷன்ல நடிங்க” என்று கடிதம் மூலமாகவும் சோஷியல் மீடியா மூலமாகவும் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த நேரத்தில், ரஜினியும் பாகுபலி பார்த்துவிட்டு தன் பாராட்டுகளை ட்விட்டரில் தெரிவிக்க, “கடவுளே வாழ்த்தியது போல இருந்தது” என்று பதிலுக்கு ட்விட்டியிருக்கிறார் ராஜமவுலி.
ரஜினி அரசியலுக்கு வர்றதுக்குள்ளே, அவரை ரவுண்டு கட்டுங்க மவுலி சார்...
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment