போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்றே துவங்கியது.
பெரும்பாலான பனிமனைகளில் ஊழியர்கள் பேருந்தை இயக்க மறுப்பு! திருச்சியில்
தொழிலாளர்கள் போராட்டத்தை துவக்கி கோஷமிட்டு வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால்
பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவை, நெல்லை,
திருவாரூருக்கு சென்னையில் இருந்து நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்
போராட்டத்தால் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை
முறியடிக்கும் வகையில், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களைக் கொண்டு அரசுப்
பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment