ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின் போது பயன்படுத்திய வெடிக்காத குண்டுகள் செயல் இழப்பு செய்யப்படுகின்றன. மேலும் அங்கு தங்கியிருக்கும் 50 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜெர்மனியில் 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிக்காத குண்டுகள் செயல் இழப்பு பெர்லின்: இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி முக்கிய பங்கு வகித்தது. சர்வாதிகாரி ஹிட்லரின் தலைமையில் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது ஏராளமான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் இன்னும் வெடிக்காத பல குண்டுகள் உள்ளன.
அது போன்ற ஆபத்தான நிலையில் உள்ள 5 குண்டுகள் ஜெர்மனியின் 10-வது பெரிய நகரமான ஹனோவரில் உள்ளது. அவற்றை இன்று செயல் இழக்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனோவர் நகரில் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் பகுதியில் தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அங்கு தங்கியிருக்கும் 50 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவற்றில் 7 பாதுகாப்பு இல்லங்கள், ஆஸ்பத்திரி போன்றவையும் அடங்கும். வீடுகளில் இருந்து, வெளியேறும் மக்கள் மருந்து உள்ளிட்ட தேவையான பொருட்களை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கியாஸ் மற்றும் எலெக்ட்ரிக் பொருட் களை அணைத்து விட்டு செல்லும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். குண்டுகளை செயல் இழக்க செய்யும் முன்பு அப்பகுதியில் ரெயில் போக்கு வரத்தும் நிறுத்தப்படுகிறது.
Home
»
World News
»
இதுதான் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய வேடிகுண்டாம்! ஜெர்மனியில் வெடிக்காமல் இருக்கிறது
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment