பிச்சைக்காரன் படத்தின் நாயகி சட்னா டைட்டசுக்கு, இவ்வளவு சட்டுன்னு கல்யாணம் நடக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்.
ஆனால் லவ்? இழுத்துப் பிடித்து இல்லறத்தை பூட்டிவிட்டது. இந்த நேரத்தில் அவர் கல்யாணத்திற்கு முன் நடித்த ‘எய்தவன்’ திரைக்கு வருகிறது. இங்குதான் ஒரு ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், பத்தாம் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்கு இடப்பெயர்ச்சி செய்துவிடுவார்களே?
எய்தவன் படத்தின் எந்த பிரமோஷனுக்கும் அவர் அழைக்கப்படுவதில்லையாம். “கூப்பிட்டா போவலாம். ஆனா அவங்களே வேணாம்னு நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல...” என்று ‘எய்தவன்’ குறித்து நொந்தவள் ஆகிறார் சட்னா! ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், இந்த பஞ்சாயத்தில் ஏதும் முன்னேற்றம் வருமா? கேட்டால், “அவங்களுக்கே படத்தில் சின்ன ரோல்தான்” என்று நழுவுகிறார் அப்படத்தின் இயக்குனர் சக்தி ராஜசேகரன். மழையே வந்து மடியில் விழுந்தாலும், குடைய வச்சு கும்புடுற கூட்டம் போலிருக்கு!
Home
»
»Unlabelled
»
நடிகையை புறக்கணித்தவர்கள் நல்லாயிருப்பாங்களா?
Friday, May 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment