பாகுபலி வெற்றி பலருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கும் இவ்வேளையில், இவ்வளவு பேரும் புகழும் நியாயமாக பெற்றிருக்க வேண்டியவர் நம்ம மணி சார்தான் என்கிற குரல் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.
யெஸ்... பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எடுக்க திட்டமிட்டார் அல்லவா? அதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்... படப்பிடிப்பு நாட்கள் என்று சிக்கனமாகவே காலை வைத்தாராம் அவர். எழுபது நாட்களில் படத்தை முடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டால், அது 120 நாட்களை கடக்கும் போல தெரிந்த்தாம்.
வேணாம்யா... டிராப் பண்ணிடலாம் என்று படத்தையே டிராப் பண்ணிவிட்டார். ஆனால் பாகுபலிக்காக ஐந்து வருடம் ஒதுக்கிய பிரபாஸ் மாதியோ, கோடிகள் ஒரு பொருட்டல்ல என்று டிசைட் பண்ணிய ராஜமவுலி மாதிரியோ ஒருவர் இருந்திருந்தால், பொன்னியின் செல்வனுக்கு உயிர் வந்திருக்கும். இனிமேலாவது வருமா?
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment