பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் இந்திய தூதரக உயர் அதிகாரியின் மொபைல்
போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில்
திருமணம் செய்து வைக்கப்பட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர், இந்திய தூதரகத்தில் தஞ்சம்
புகுந்துள்ளார். இந்த வழக்கு இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில்
நடந்தது.
அப்போது உஸ்மா சார்பில், இந்திய தூதரக அலுவலகத்தில், விசா மற்றும் தூதரக
உதவி தொடர்பான பிரிவில் பணிபுரியும் பியூஸ் சிங் கோர்ட்டிற்கு
வந்தார்.அங்கு பியூஸ் சிங்கின் போனை ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
அப்போது பியூஸ் சிங், தான் மொபைலில் எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், போட்டோ
எடுக்கவில்லை எனக்கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிந்த பின்னர் போன்
திருப்பி கொடுக்கப்பட்டது. இதற்காக அபராதம் மற்றும் நடவடிக்கை
எடுக்கவில்லை. பியூஸ் சிங் கோர்ட் நடவடிக்கைகளை வீடியோ எடுத்ததாக
அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விவகாரம் பெரிய பிரச்னை ஏதுமில்லை. அவருக்கு விதிமுறை தெரியாததால்,
மொபைல் போனை எடுத்தார் என அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
குல்பூஷண் ஜாதவ் விவகாரம் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம்
அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம்
ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Saturday, May 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment