கலைஞரின் வைர விழாவிற்கு பாஜகவை அழைப்பதாக இல்லை என்று திமுக செயல்
தலைவர் ஸ்டாலினும், இவர்கள் என்ன அழைப்பது என்று பாஜகவை சேர்ந்த மத்திய
அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் கூறியுள்ளார்கள்.
வருகிற ஜூன் மாதம் 3ம் திகதி கலைஞர் சட்டப்பேரவையில் பணியாற்றத் துவங்கிய
வைர விழா ஆண்டை திமுக சார்பில் கொண்டாட உள்ளார். இவ்விழாவில்
கலந்துக்கொள்ள தேசிய அளவில் பெரும் தலைவர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு அழைப்பு விடுவீர்களா என்கிற
கேள்விக்கு, திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று சபதம் மேற்கொண்டுள்ள
பாஜகவுக்கு அழைப்பு விடுப்பதாக இல்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஊழல் கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை வீழ்த்துவோம் என்று கூடியுள்ள திமுக
எங்களை என்ன அழைப்பது என்று பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது
கலைஞருக்கான விழா அல்ல, அரசியல் நோக்கத்துக்கானது என்றும்
கூறியுள்ளார்.அதோடு, கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது வேறு விஷயம்
என்றும் அவர் கூறியுள்ளார்.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment