Friday, May 5, 2017

இளம் இயக்குனர்களில் வளமான இயக்குனர் அட்லீதான். ராஜா ராணி, தெறி என்று வளர்ந்து மூன்றாவது படத்திலேயே மூக்கு மேல் விரல் வைத்து வியக்குமளவுக்கு சம்பளம் வாங்கியவர் இவர்தான் என்று வியக்கிறது ஊர் உலகம். இந்த சம்பள ரெகமென்டேஷன் மிஸ்டர் விஜய் என்றாலும், அதையும் மனமுவந்து கொடுக்கிற அளவுக்கு மார்க்கெட் இருப்பதால்தானே கொடுக்க முடிகிறது? சினிமா நமக்கு தந்த பெருமைக்கும் புகழுக்கும் திருப்பி கைமாறு செய்வோம் என்ற நல்ல எண்ணத்தில் புரடக்ஷன் கம்பெனியும் துவங்கிய அட்லீ, அடுத்தடுத்து புது புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கப் போகிறார் என்பதும் நல்ல விஷயம்தான். ஆனால் அங்குதான், குரங்கு கையில் பூமாலையோடு கூத்தாட ஆரம்பித்துவிட்டதோ என்கிற அச்சம்.

என்னவே…. என்ன?

பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யாவுக்கு இயக்குகிற வாய்ப்பளித்த அட்லீ, தானே முன் வந்து அவருக்காக ஹீரோவை வலை வீசினாராம். அதில் விழுந்தவர்தான் கேரள கரையோரத்தின் இளம் சீற்றம் நிவின் பாலி. அங்கு அவருக்கு இருக்கும் மார்க்கெட்டில் மிச்ச சொச்சம் தமிழிலும் இருக்கிறது என்றும் நம்பினார் அட்லீ. ஏன்? நிவின் பாலி நடித்த நேரம் படம், தமிழிலும் தாறுமாறு ஹிட் அடித்தது. அந்த நம்பிக்கையில் அவரிடம் கதை சொல்லப் போன, சுமார் முக்கால் டஜன் இயக்குனர்கள் முளையிலேயே கிள்ளப்பட்டார்கள். ஏன்? நல்ல முயற்சிகளுக்கு மட்டுமே யெஸ் சொல்லப் பழகிய நிவினுக்கு, இவர்கள் சொன்ன கதை, ஆக்ஷன், கற்பழிப்பு. பின்னி மில்லில் க்ளைமாக்ஸ் தமிழ்சினிமா துப்பிப் போட்ட விஷயங்களே. அட போங்கப்பா என்று அலுத்துப்போயிருந்த நேரத்தில்தான் அட்லீ என்ட்ரி.

பாலகுமாரன் சூர்யாவை அவரிடம் கதை சொல்ல வைத்து, சொல்லி முடித்த மாத்திரத்தில் அட்வான்ஸ் வாங்குகிற அளவுக்கு கதையிலும், படத்தை உருவாக்கும் அட்லீ மீதும் நம்பிக்கை வைத்தார் நிவின். பிசி ஷெட்யூலில் குறிப்பிட்ட தேதிகளையும் ஒதுக்கிக் கொடுத்தாராம். அங்குதான் விதி குடுகுடுப்பை ஆட்டியது. நினைத்த மாதிரி அவரது கால்ஷீட்டை பயன்படுத்தாமல், பட வேலையை தள்ளி தள்ளி போட்டார் அட்லீ.

இப்போது மீண்டும் கால்ஷீட் கேட்டுப் போனால், கதவ சாத்தாத குறையாக விரட்டுகிறாராம் நிவின்பாலி.

சொந்த வீட்டு பானைதானேன்னு தூக்கிப் போட்டு உடைச்சா? இப்படிதான் நடக்கும்….

0 comments :

Post a Comment

 
Toggle Footer