தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமாறு, கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.
“ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் அறிக்கைகள் விட இடமளிக்க வேண்டாம். அது இராஜதந்திர அணுகுமுறைக்கு பாதமாகிவிடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தனுக்கு இன்று திங்கட்கிழமை எழுதியுள்ள கடிதமொன்றிலேயே வீரசிங்கம் ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் செயற்பாடுகள், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் எமது அப்பாவி மக்களே கடுமையாகப் பாதிக்கப்படுவர். எமது நாட்டு மக்களுக்கு உதவ முன்வருகின்றவர்களை, பல தரப்பட்ட அறிக்கைகளை விடுத்து, அவர்களின் மன உணர்வுகளை புண்படுத்த வேண்டாம்.
எமது இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக்கூடிய தகுதியுடைய நாடு இந்தியா மட்டுமே. ஆகவே, இறுதித் தீர்வு ஏற்படும்வரை அதனுடைய செயற்பாட்டில் எவரும் தலையிடக்கூடாது. குளவிக்கூட்டுக்கு கல்லெறிந்து எவரையும் சங்கடத்துக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை. ஆகவே தான், எந்த விடயத்தையும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், மக்கள் உங்களிடமிருந்து எதனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்களென நம்புகிறேன்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கட்டுக்குள் வைத்திருக்கவும்; சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்!
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment