Thursday, May 11, 2017

மோசடிகள் நிறைந்த பொருத்து வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு மாகாணத்தில் 65,000 பொருத்து வீட்டுகளை அமைப்பது தொடர்பிலான திட்டத்தின் முதற்கட்டமாக 6,000 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வீட்டுத் தேவைக்கான அவசியத்தை சாதகமாகக் கொண்டு மோசடிகள் நிறைந்த இந்த திட்டத்தை முன்னெடுக்க அனுமதிக்க மாட்டோம். மீள்குடியேற்றத்திற்காக ஒரு இலட்சத்து முப்பதாயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. இந்த பொருத்து வீடுகளை அமைக்கும் செலவில் இரண்டு கல் வீடுகளை அமைத்து விடலாம். பொருத்து வீடுகளை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும், இத்திட்டத்தை மக்கள் விரும்பாத நிலையில் அதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்றுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer