‘AK 57’ என்றுதொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டில் இருந்த அஜித்குமாரின் 57 வது படமான ‘விவேகம்’ டீசர்மே 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஆனால் அடுத்த நாளே, ‘டீசர் தயாராகி விட்டது. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிடப்படும்’ என்று அறிவித்து ரசிகர்களின் பல்ஸ் ஏற்றினார். அதன்படி இன்று விடியற் காலை 12.01 மணிக்கு ‘விவேகம்’ டீசர் வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் லீக் ஆனாலும், தொடர்ந்து பல சாதனைகளை தகர்த்து வருகிறது ‘விவேகம்’ டீசர்.
வெளியான ஒரு மணிநேரத்திற்குள் 100 ஆயிரம் லைக்ஸ், அடுத்த அரை மணி நேரத்தில் 150 ஆயிரம் லைக்ஸ் என்று தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் டீசர் மதியம் 3 மணியளவில் 256 ஆயிரம் லைக்ஸ் வாங்கி புதிய சாதனையையும் படைத்துள்ளது. வைத்த கண் வாங்காமல் அஜித்தை மட்டுமே டீசரில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள், இந்த சில விஷயங்களை கவனித்தீர்களா?
► அஜித்தின் 57வது படம் விவேகம். டீசர் ஓடும் நேரம் 57 நொடி.
► Counter Terrorist squad அலுவலக கம்ப்யூட்டர் திரைகளில் அஜித் புகைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கடுத்த ஷாட்டிலேயே ‘Most Wanted Criminal’ என்று CIA, Interpol அதிகாரிகள் ப்ரஸ்மீட்டில் பேசும் வசனம் வருகிறது.
► அஜித் நடக்கும்ஒரு ஷாட்டின் முன்னணியில் ஒரு பச்சோந்தி காட்டப்படுகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையில் அஜித் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கலாம். அதற்கான குறியீடா பச்சோந்தி?
► டீசரில் Kraljevica,Karardeva, Hercegovacka போன்ற பெயர்கள் தென்படுகின்றன. இவை அனைத்தும் செர்பியா, க்ரோடியா நாடுகளில் உள்ள இடங்கள். அந்த பகுதியில் நிகழுமாறு கதை அமைக்கப்பட்டிருக்கலாம்.
► விவேகம் என்ற டைட்டிலுக்குக் கீழே போடப்படும் Believe in Yourself என்ற கேப்ஷனில் ‘Be you’ என்றவார்த்தைகள் மட்டும் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கின்றன.
► சில ஷாட்டில் ராணுவ உடையிலும், சில ஷாட்டில் ராணுவம் சுற்றிவளைத்தும் வருகிறார் அஜித். அரசாங்க உளவுத்துறை அதிகாரி, வில்லனின் சதி மூலம் அரசாங்கத்தினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்ற களமாக இருக்கலாம்.
► ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, தோத்துட்ட னு, உன் முன்னாடிநின்னு அலறுனாலும், நீயா ஒத்துக்கற வரைக்கும், எவனாலயும், எங்கயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது’ என்று வரும் வசனமும் ‘Never Ever Give up’ என்று வசனமும் இதை ஊர்ஜிதப்படுத்துவது போல் அமைந்துள்ளது.
► பனி படர்ந்தகாட்டுக்குள் அஜித் தனியே அலையும் ஷாட்டுகளும், அதிலிருந்து மீள தன்னைத்தானே வலிமையாக்கிக் கொண்டும் மீண்டு எழும் ஷாட்டுகளும் டீசரில் அங்கங்கே நிறைந்திருப்பதை காணலாம்.
► திரையுலகில் அஜித்குமாரின் 25 வது ஆண்டு இது என்பதும், திரைப்படம் ஆகஸ்டில் வெளியாகிறது என்பதும் டீசரில் காட்டப்பட்டிருக்கின்றன.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment