கமல் இயக்கத்தில் விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது சபாஷ் நாயுடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கமல். இந்த நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நட்சத்திரங்களான சல்மான் கான், அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி, சஞ்சய் தத் போன்றவர்கள் தொகுத்து வழங்கிருக்கிறார்கள்.
இப்போது அந்த நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கான கலை வடிவமைப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் ஒரு கோடி ரூபாய்க்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 18 தேதி முதல் விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பப்படும் என்று நிகழ்ச்சிக் குழு உறுப்பினர்கள் சொல்கிறார்கள். இதை பற்றி கமலிடம் கேட்டபோது, "இதுவரைக்கும் மக்கள் தான் என்னை தேர்ந்தெடுத்து ஒரு நிலையான இடத்துல வெச்சிருந்தாங்க. ஆனா இப்போ நான் மக்களுடன் ஒருவனா இருந்து மற்றவர்களை தேர்ந்தெடுக்க போகிறேன்." என்றார்.
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment