நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத் திட்டம் காலிமுகத்திடலில் இருந்து ஆரம்பித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) மே தினக் கூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காலிமுகத்திடலை நிரப்பும் வகையில் கூட்டத்தை கொண்டு வருமாறு அரசாங்கம் முன்வைத்த சவாலை நிறைவேற்றி காட்டியுள்ளோம். அதன்படி உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்திக்காட்டுமாறு அரசாங்கத்திற்கு நாங்கள் சவால் விடுக்கின்றோம்.
அரசாங்கம் தற்போது தேசிய வளங்களை விற்றுவருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்துடன் 15,000 ஏக்கரை சீனாவுக்கு வழங்கவும், மாதுறு ஓய பிரதேசத்தில் காணியைப் பெற்றுக்கொடுக்கவும், திருகோணமலை துறைமுகத்தை விற்பதற்கும் அனைத்து திட்டங்களும் தயாராகியுள்ளன.
மக்களின் ஒரு பகுதியினர் அன்று ஏமாந்ததாலும், மீண்டும் ஏமாற தயாரில்லை. தேசிய வளங்களைப் பாதுகாக்க தேசியக் கொள்கையொன்றை ஏற்படுத்தி உறுதியான தொடர்ச்சியான போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தில் தனது அரசாங்கத்தை கவிழ்க்க 660 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சிலர் அதற்கான பணத்தை மலசலகூடங்களில் வைத்து வழங்கியதாக பிரதேச சபை உறுப்பினரொருவர் கூறியுள்ளார்.
என்னுடைய ஆட்சிக்காலத்தில் முப்படைகளையும் உபயோகித்து பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தினேன். ஆனால் இந்த அரசாங்கம் கோரிக்கைகளை வென்றெடுக்கும் பொருட்டு பாதைக்கு வரும் மக்களை அடக்கவே முப்படைகளை பயன்படுத்துகின்றது.
குப்பை மலை சரிவடைந்து வீழ்ந்ததனால் மக்கள் மரணமடைந்த சம்பவம் உலகில் வேறெந்த நாட்டிலும் நடைபெறவில்லை. துரதிஷ்டவசமாக இந்நாட்டின் இது நடந்துள்ளது. குப்பையை அகற்ற வழியில்லாத அரசாங்கம் எனக்கு சவால் விடுப்பது நகைச்சுவையாக உள்ளது. இது ஜனநாயகத்தை பலப்படுத்தும் மே தினம். நாட்டை ஏலமிடும் விரயம்செய்யும் இந்த அரசாங்கத்தின் முடிவை தீர்மானித்து நாட்டை அழிக்கும் கள்வர்களை விரட்டி புதிய அரசாங்கத்துக்கு வழி அமைக்கும் மே தினம்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத் திட்டம் காலி முகத்திடலில் ஆரம்பம்: மஹிந்த
Tuesday, May 2, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment