கெஜ்ரிவாலுக்கு எதிராக ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா கட்சியிலிருந்து
நீக்கப்பட்டுள்ளார்.
டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து டெல்லியில் உண்ணாவிரதம்
இருந்த அவரை சிலர் தாக்கினர்.இந்நிலையில் கபில் மிஸ்ரா தாயார்,
அன்னபூர்ணா மிஸ்ரா கெஜ்ரிவாலுக்கு கடிதம்: ஒன்றை
எழுதியுள்ளார்.அதில்,கெஜ்ரிவால் எத்தனை பொய் சொல்வீர்கள். பொய்கள்
உங்களுக்கு உதவ போவதில்லை. நீங்கள் கடவுளுக்கு பயப்பட வேண்டும்.
உங்களுக்கு எதிராக எனது மகன் கேள்வி கேட்பான் எனவும், அதற்கு நீங்கள்
பதில் சொல்லாமல் புறக்கணிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. எனது
வீட்டிற்கு வந்த நீங்கள், கபில் மிஸ்ரா கட்சியில் இணைய வேண்டும்.
தேர்தலில் போட்டியிட வேண்டும் என கூறினீர்கள். இதனை எனது மகன் ஏற்காத
போது, நீங்கள் தான் அழைத்து சென்றீர்கள். இன்று உங்களது ஆதாரவாளர்கள்
என்னை ஊழல் வாதிகள் எனக்கூறுகின்றனர்.
நீங்கள் மவுனமாக இருப்பது வேதனையாக உள்ளது. கபில் மிஸ்ராவுடன் பணிபுரிந்த
நீங்கள், அவரை புரிந்து கொள்ளவில்லை. மிஸ்ரா கடந்த 3 நாளாக எதையும்
சாப்பிடுவதில்லை. தாய் என்ற முறையில், எனது மகன் என்ன கேட்கிறானோ அதை
கொடுங்கள். வெறும் தகவலை தான் கேட்கிறார். மிஸ்ரா யாருக்கும் கையாள்
இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Saturday, May 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment