கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பி.டி. கத்திரியை வரவிடாமல் தடுக்க
நடைபெற்ற போராட்டம் பற்றி நினைவிருக்கலாம். ஏழு வருடங்களுக்குப் பின்னர்
இப்போதும் பி.டி. கத்திரி பாதுகாப்பானது என்று நிரூபிக்க முடியவில்லை.
உச்ச நீதிமன்றத் தொழில்நுட்ப வல்லுநர் குழு இதையே வலியுறுத்தி மரபணு
மாற்றப்பட்ட உணவுப் பயிரும், களப்பரிசோதனையும் தேவையில்லை என்று
பரிந்துரைத்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவும் மரபணு மாற்றப்பட்ட பயிர் நம்
நாட்டுக்குத் தேவை இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர் இந்தியாவில் இன்னும்
அறிமுகப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் கடுமையான எதிர்ப்பை. தற்போது
மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிரை அறிமுகப்படுத்தத் துடிக்கிறது. பி.டி.
கத்திரியை அறிமுகப்படுத்த மான்சான்டோ என்ற பன்னாட்டு வேளாண் நிறுவனம்
முயற்சித்தது.
இப்போது மரபணு மாற்றப்பட்ட கடுகை அறிமுகப்படுத்த முயற்சித்து
வருகிறது.,அரசு அமைப்பான டெல்லி பல்கலைக்கழகம். இந்தியாவில் மரபணு
மாற்றம் செய்யப்பட்ட கடுகை வணிக ரீதியாக சாகுபடி செய்ய அனுமதி
வழங்குமாறு, மத்திய அரசுக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு
பரிந்துரை வழங்கியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் பருத்தி மட்டுமே
தற்போது இந்தியாவில் பயிரிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மரபணு மாற்றம்
செய்யப்பட்ட கடுகுக்கும் அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment