நகைச்சுவை நாயகன் நாகேஷ் நடிப்பில் 1964ஆம் ஆண்டு வெளிவந்த ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் தமிழ்த்திரை வரலாற்றில் ஒரு முக்கியமான படமாக இன்று வரை இருக்கிறது. இப்படத்திற்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் திரைக்கதை எழுதினார் என்பது அப்படத்தின் கூடுதல் சிறப்பு. இப்போது அதே தலைப்பில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குனரான ஆனந்த் பால்கி இயக்கத்தில் கேட்டரிங் மாணவராக சந்தானம், அவருக்கு ஜோடியாக மராத்தி நடிகையான வைபவி ஷண்டில்யா, துணை கதாபாத்திரத்தில் நாகேஷ் பேரன் பிஜேஷ், ஆகியோர் நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘சர்வர் சுந்தரம்’. இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வர்மா, படத்தொகுப்பாளராக தினேஷ் பொன்ராஜ் ஆகியோர் பணியாற்றிருக்கின்றனர். இதற்கு முன்பு சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ ஒரு நல்ல வெற்றி படமாகவே அமைந்திருந்தது. சர்வர் சுந்தரம் படத்தின் இசை வரும் மே 10 அன்று வெளிவர இருக்கிறது.
சந்தானம், சந்தோஷ் நாராயணன் இருவரும் இணையும் முதல் படம் ‘சர்வர் சுந்தரம்’. சர்வர் சுந்தரம் படத்தின் டீஸர் பிப்ரவரியில் வெளியானது. தற்போது படத்தை பற்றி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரப்பேற்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படம் மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சந்தானம், ஹீரோவாக மூன்று படங்களில் நடித்துவருகிறார். அதில் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ வித்தியாசனாம படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment