இலங்கையின் இறுதிப் போரின் போது குற்றமிழைத்தவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்குத் தொடர வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூகா நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை அரச படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள், போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. ஜகத் டயஸின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அத்தோடு, ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில், ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிலைநிறுத்தப்படக் கூடாது.” என்றுள்ளது.
Home
»
Sri Lanka
»
போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழக்குத் தொடர வேண்டும்: யஸ்மின் சூகா
Monday, May 29, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment