வடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் யூன் மாத இறுதியில் விவாதமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 93வது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனைச் செய்யவில்லை என்றும் பட்டியல் இட வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையிலேயே, மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பான விவாதம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் நடைபெறும் என்று அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
Sunday, May 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment