தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள படம் 'சங்கமித்ரா' . இந்த படத்தின் அறிமுக நிகழ்வானது பிரான்ஸில் கான் திரைப்பட விழாவில் அரங்கேறியது. இந்த விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநர் சாபுசிரில் என அனைவரும் கலந்து கொண்டனர். இவ் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'சங்கமித்ரா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் கடந்த வாரம் வெளியாகி... தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
'பாகுபலி' படத்தையே மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படம் தான் எனது இயக்குநர் வாழ்க்கையிலே மிக முக்கியப் படமாக இருக்கும் என சுந்தர்.சி சொல்லி வந்த நிலையில், தற்போது இந்த படத்திலிருந்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஸ்ருதிஹாசன் விலகியிருப்பதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஸ்ருதி ஹாசன் விலகியதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளி வராத நிலையில், சங்கமித்ரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தான் ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment