சென்னை திருமங்கலம் முதல் எழும்பூர் அருகே நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில்
சேவை நேற்று தொடங்கப்பட்டது.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
பின்னர், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, கொடியசைத்து, ரயில் சேவையை
தொடங்கி வைத்தார்.
அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசுகையில், மெட்ரோ ரயில் சேவைக்கான தொடக்க
விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.
கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர்
ஜெயலலிதா தான் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் கனவுகளை
நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர்
வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment