தமது சினிமா நிறுவனத்தின் சொந்த தயாரிப்பு படத்துக்கு கதை வசனம் எழுதும்
பணிகளைத் துவக்கி உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
இயக்குநராக வேண்டும் என்ற விஜய் சேதுபதியின் ஆசை, நாளுக்கு நாள் வளர்ந்து
கொண்டே போகிறது. என்ன கேரக்டராக இருந்தாலும், அதை உள்வாங்கி இயல்பாக
நடிப்பவர் விஜய் சேதுபதி. சினிமாவில் சம்பாதிப்பதை, சினிமாவிலேயே
கொட்டும் நல்ல மனசுக்காரர்களில் ஒருவர்.
தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் ஆரஞ்சு மிட்டாய், மேற்கு
தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்துள்ள விஜய் சேதுபதி, மூன்றாவது
தயாரிப்புக்குத் தயாராகிவிட்டார். ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜு
விஸ்வநாதன் தான் இந்தப் படத்தையும் இயக்கப் போகிறார்.
ஆனால், கதை மற்றும் வசனம் எழுதும் பொறுப்பை விஜய் சேதுபதி ஏற்றுக்
கொண்டுள்ளார். இயக்குநராக வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு.
அதற்கு முதல்படியாக கதை, வசனம் எழுதிப் பழகுகிறார் விஜய் சேதுபதி.
Sunday, May 7, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment