Tuesday, May 9, 2017

அப்படியே ஷாக் ஆகிட்டாரு சத்யஜோதி தியாகராஜன். இவர் விவேகம் படப்பிடிப்புக்காக பல்கேரியா போயிருந்த நேரத்தில் இங்கு தேர்தல் வந்தது. அதில் நின்ற தியாகராஜன் ஓட்டு கேட்காமலும், ஓட்டு போடாமலும் செயற்குழு உறுப்பினர் ஆகிவிட்டார்.

திரும்பி வந்த நேரத்தில்தான் ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் விஷால்.

“ஏங்க... விவேகம் வர்ற நேரத்துல ஸ்டிரைக்குன்னா எப்படி நான் போஸ்ட் புரடக்ஷன் வேலை பார்க்கறது?” என்றாராம்.

அதற்கு முன்னதாக இவர் நிறுவனம் தயாரித்து, ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் சத்ரியன் படத்தையும் இம்மாதம் வெளியிடும் முடிவில் இருந்தாராம். எல்லாம் போச்சு இப்போ.

இருந்தாலும் அவருக்கு எல்லா பிரச்சனையையும் எடுத்துச் சொல்லி புரிய வைத்ததாம் தயாரிப்பாளர் சங்கத் தலைமை.

இன்னொருபக்கம் விஜய் 61 படத்திற்கும் இதே பிரச்சனை. திட்டம் போட்டு கட்டம் கட்டிட்டாங்களோ?

0 comments :

Post a Comment

 
Toggle Footer