Monday, May 8, 2017

ராணுவத்துக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்க வலியுறுத்தி மணிப்பூரில் 2000ஆம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டவர் இரோம் சர்மிளா. கடந்த ஆண்டு போராட்டத்தை முடித்துக் கொண்டார். பின்னர் மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி என்ற கட்சியை தொடங்கிய அவர் மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

45 வயதாகும் இரோம் சர்மிளா, இங்கிலாந்தில் வசிக்கும் தமது நீண்ட கால நண்பரான டெஸ்மாண்ட் கவுடின்ஹோ என்பவரை ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தங்களது திருமணம் தமிழகத்தில் நடக்கவுள்ளதாக இரோம் சர்மிளா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer