தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தான் வேண்டப்படாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்புக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவுஸ்திரேலியவின் சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, "நான் நேற்றைய (வியாழக்கிழமை) இரவு இராப்போசன விருந்துக்கு சென்றேன். மோடி எனக்கு கைலாகு கொடுத்து என்னை நலம் விசாரித்தார். நான் இருந்த இடத்திலிருந்து மோடி சற்று தொலைவிலேயே இருந்தார். அதனால் நான் அவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. எனினும் அவருடன் வருகை தந்திருந்த வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரிடம் சில விடயங்களை தெரியப்படுத்தினேன்.
பலாலி விமான நிலையத்தை மக்களின் காணிகளை சுவீகரிக்காத வகையில் பிராந்திய விமான நிலையமாக மாற்றவேண்டும். இதனை வர்த்தக நடவடிக்கைக்கு பயன்படுத்த கூடியவாறு அமைக்க வேண்டும். தனுஷ்கோடி, தலைமன்னார் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜெயசங்கரிடம் தெரிவித்தேன்.” என்றுள்ளார்.
Sunday, May 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment