இன்று என்னை நடிகனாக வைத்திருக்கிறான்,நாளைக்கு ஆண்டவன் என்னை என்னவா
பயன்படுத்துவானோ அதை கண்டிப்பாக நான் செய்வேன் என்று ரஜினிகாந்த்
மீண்டும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 5 தினங்களுக்கு ரஜினிகாந்த் தமது ரசிகர்களை சந்தித்து
அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்..அப்போது முன்னதாக பேசிய
அவர் பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு கூட்டணியை ஆதரிக்கும்
சூழல் ஏற்பட்டது.அதை எனது ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு
செயல்பட்டார்கள்.அனால், சிலர் இதனால் பணம்பார்த்து அந்த ருசியில்
தொடர்ந்து எனது பெயரை பயன்படுத்தி வருகிறார்கள்.
நான் கடவுளின் கருவி.இன்று நடிகனாக வைத்திருக்கிறான், நாளை என்னவாகி
பார்ப்போனோ அதை நான் செய்வேன்.அப்போது பணம்பார்க்கும் எண்ணத்தில்
இருப்பவர்களை நுழையக் கூட அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.இது
ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, தலைவர் அரசியலுக்கு வருவார்
என்கிற எதிர்பார்ப்பைத் தூண்டி உள்ளது.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment