Thursday, May 11, 2017

தென்கொரியாவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 41.1% வீத வாக்குகளைப் பெற்று ஜனநாயக் கட்சி வேட்பாளரான மூன் ஜயே இன் அபார வெற்றி பெற்றார்.

இதையடுத்து தலைநகர் சியோலில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அதிபராகப் பதவிப் பிராமணம் செய்ததுடன் பொது மக்கள் முன்பு உரையாற்றினார். இதன்போது அவர் வாஷிங்டன், பீஜிங் மற்றும் டோக்கியோ மட்டுமன்றி வடகொரியாவுக்குக் கூட அவசியப் பட்டால் சரியான தருணம் கிடைக்கும் போது தான் விஜயம் செய்வேன் என அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிய விரும்புவதாகத் தெரிவித்த மூன் தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே தான் சேவையாற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். முன்னால் மனித உரிமைகள் சட்டத்தரணியான மூன் ஜயே இன் பதவியேற்ற அடுத்த கணமே  அமைதியான முறையில் வடகொரிய விவகாரத்தை அணுகுவதற்கும் அங்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்ததும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் வேகமாக முற்றி வரும் வடகொரிய போர்ப் பதற்றத்துக்கு மாற்றாக மக்களுக்கு சற்று நம்பிக்கை அளித்துள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer