முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி
சிதம்பரம் ஆகியோரது வீடுகளில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரது வீடுகளும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது. இதுதவிர
காரைக்குடியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8
இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.முன்னதாக கடந்த
மாதம் அந்நிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர்
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் வாசன் ஹெல்த் கேர்
நிறுவனத்துக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.பெமா (FEMA)
சட்டவிதிகளின்படி அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்கம் கோரி
நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.45 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் கார்த்தி சிதம்பரம்
ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், வாசன் ஹெல்த் கேர் லிமிடட் நிறுவனர்
ரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த
புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ்
அனுப்பியது.
அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்துக்கும்
விளக்கம் கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்நிறுவனத்தின்
நிர்வாக குழுவில் கார்த்தி சிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும்
அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் ஏதும்
உறுதிபடுத்தப்படவில்லை.
நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி
வருகிறது. .இருவரது வீடுகளிலும் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை
நடத்தி வருகிறார்கள். வீடுகள் மட்டுமின்றி, சென்னை, காரைக்குடி, டெல்லி,
நொய்டா உள்பட 14 இடங்களில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு சொந்தமான
இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதில் சென்னையில் மட்டும் 8 இடங்களில் ரெய்டு
நடைபெறுகிறது.
பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் செய்த மர்மமான பெரும்
முதலீடு விவகாரத்தில் கார்த்தி பெயரும் அடிபட்டது தொடர்பாக இந்த ரெய்டு
நைடபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment