மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை
நிரூபித்து தேர்தல் ஆணையத்தின் திருட்டுத்தனம் செய்துள்ளது என்று
அம்பலப்படுத்தியதால் ஆம் ஆத்மி மீது திருட்டு புகார் கொடுக்க இருக்கிறது
தேர்தல் ஆணையம்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை
விளக்குவதற்காகவே டெல்லியில் ஆம் ஆத்மி அரசு நேற்று சிறப்பு சட்டசபையைக்
கூட்டியது. இந்த கூட்டத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை ஹேக் செய்து
எப்படியெல்லாம் திருட்டுத்தனம் செய்ய முடியும் என்பதை ஆம் ஆத்மியின்
பரத்வாஜ் விவரித்தார். ஒரு இயந்திரத்தில் செலுத்தப்படும் அத்தனை
வாக்குகளுமே ஒரே ஒரு வேட்பாளருக்கு மட்டுமே செல்லும் வகையில் வாக்குப்
பதிவு இயந்திரத்தில் செய்ய முடியும். இப்படித்தான் பஞ்சாபில் ஆம்
ஆத்மிக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு போனது என்றும்
பரத்வாஜ் விளக்கினார். இதனால் டெல்லி சட்டசபையில் அமளி துமளியானது.
இதையடுத்து, அது உண்மையான தேர்தல் மின்னணு வாக்கு எந்திரம் இல்லை என்று
கூறியுள்ள தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி மீது புகார் கொடுக்க உள்ளது.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment