இரட்டைக் குடியுரிமையுள்ள 8 பேர் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றஞ்சுமத்தியுள்ளார்.
கீதா குமாரசிங்கவிற்கு பிரயோகிக்கப்பட்ட சட்டம் ஏனைய இரட்டைக் குடியுரிமையுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயங்கள் தொடர்பிலான சகல தகவல்களும் திரட்டப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
இரட்டைக் குடியுரிமையுள்ள 8 பேர் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்: உதய கம்மன்பில
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment