மேல் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்பொருட்டு நீதிமன்ற ஒழுங்கமைப்பு சட்டமூலத்தை திருத்துவதற்கு சட்ட வரைவு தொகுப்பாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நீதியமைச்சர் விஜதாச ராஜபக்ஸ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் 75 பேர் தற்போது நீதிமன்ற கட்டமைப்பில் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தீர்வு காணப்படாத வழக்குகள் பெருமளவில் உள்ள நிலையில் அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்கும் பொருட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை குடியியல் மேன்முறையீடுகள் மேல்நீதிமன்றங்களில் 5,749 வழக்குகளும், வர்த்தக மேல் நீதிமன்றங்களில் 5,580 வழக்குகளும், ஏனைய மேல் நீதிமன்றங்களில் 16,574 வழக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment