வியாழக்கிழமை அதிகாலை சீனாவின் மேற்கேயுள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் 5.4 ரிக்டர் அளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியானதுடன் 20 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் உணரப் பட்டது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள சில கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து சேதம் அடைந்துள்ளதுடன் பல முறை தொடர் அதிர்வுகளும் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்தனர். இப்பகுதிகளில் மீட்புப் பணியில் சீன இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. 150 இற்கும் மேற்பட்ட வீடுகள் நிலநடுக்கம் காரணமாக சேதம் அடைந்ததாகத் தெரிய வருகின்றது.
அதிகமுறை நிலநடுக்கம் ஏற்படும் வலயமான சீனாவின் மேற்குப் பகுதியில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்துக்கு 90 000 பொது மக்கள் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment