Monday, May 8, 2017

தனது ஆசிரியையான மூன்று பிள்ளைகளின் தாயை முடித்த மக்கொன்..

பிரான்சின் முதல் பெண்மணியாகியுள்ள மக்கொனின் மனைவி பியகீற்றாவுக்கு அவரைவிட 24 வயதுகள் அதிகம், 1953ம் ஆண்டு பிறந்தவர், மக்கொன் 1977ம் ஆண்டு பிறந்தவர்.

மூன்று பிள்ளைகளின் தாயான பியகீற்றாவை உயர் நிலைப்பாடசாலையில் தனது இலக்கிய ஆசிரியராக சந்தித்தபோது மக்கொனுக்கு வயது 15.

பெற்றோர் வெறுத்தாலும் 17 வயதில் தன்னைவிட 24 வயது கூடிய பெண்ணை மணமுடிக்க முடிவு செய்தார், 2007 இருவரும் மணமுடித்தனர், இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை ஆனால் தனது மனைவியுடைய மூன்று பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளான பேரக்குழந்தைகள் ஏழும் தனது பிள்ளைகளே என்கிறார் மக்கொன்.

மனைவியை விட கணவனே அதிக வயதுடையவராக இருக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தை புரட்டிப் போட்டு தன்னைவிட 24 வயது மூத்த பெண்மணியை பிரான்சின் முதல் பெண்மணியாக்கியிருப்பது மக்கொன் செய்த முதல் சாதனையாகும், ஏறத்தாழ இது உலக சாதனையாகவே இருக்கிறது.

இத்தகைய பின்னணிகளுடன் ஐரோப்பாவின் சக்தி மிக்க தலைவராகிறார் மக்கொன்..

அவரிடமுள்ள சக்திகள் என்ன.. இதோ கொஞ்சம் படித்துப் பாருங்கள்..

உலகத்தின் அதிகாரத்தை தீர்மானிப்பது ஐந்து பிளஸ் ஒன்று நாடுகள் என்ற ஆறு நாடுகளே அவையாவன அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து வீட்டோ உரிமை நாடுகளுடன் ஜேர்மனியையும் சேர்த்தால் ஆறு நாடுகள் இணைந்து ஐந்து பிளஸ் ஒன்று என்ற ஆறு நாடுகள் வரும்.

இந்த ஆறு பெரும் வல்லரசுகளிலும் ஆறு முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள், இவர்களில் அதிக அதிகாரம் உள்ளவர் யார்..?

அணு குண்டின் விசையை கடைசியாக அழுத்தும் ஆட்காட்டி விரலுக்கு செந்தக்காரராக இருப்பது..

பாராளுமன்றத்தை கலைப்பது, முப்படைகளின் தலைவராக இருப்பது, நீதிபதிகளை நியமிப்பது என்று பத்து மாபெரும் அதிகாரங்கள் உள்ளன.

இவற்றில் எட்டு அதிகாரங்களை தன் கைவசம் வைத்து சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகார தலைவராக விளங்குகிறார் ரஸ்ய அதிபர் புற்றின்.

இப்போது இவருக்கு இணையாக எட்டுப் பெரும் அதிகாரங்களுடன் ஐரோப்பாவில் உருவாகியுள்ள ஒரேயொரு தலைவர் புதிதாக தேர்வாகியுள்ள பிரான்சிய அதிபர் எமானுவல் மக்கொன்தான்.

இவர்கள் இருவருக்கும் இணையான அதிகாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பிற்கு கிடையாது அவரிடம் ஐந்து அதிகாரங்கள் மட்டுமே இருக்கின்றன, அதனால்தான் சின்னச் சின்ன நீதிமன்றங்களின் நீதிபதிகள் எல்லாம் அவருடைய கைகளை கட்டிப்போடுகிறார்கள் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.

ஜேர்மனிய சான்சிலர் கையில் மூன்றே மூன்று அதிகாரங்கள் மட்டுமே இருக்கின்றன, பிரிட்டன் பிரதமர் தெரேசா மே மகாhணியாருக்குக் கீழ்தான் இருக்கிறார்.

ஆகவேதான் ஜனநாயக முறைப்படி தேர்வாகி அதிக அதிகாரங்களை கொண்ட பெரும் தலைவராக மக்கொன் உருவாகியிருக்கிறார்.

இதே அதிகாரங்கள் தற்போதைய அதிபர் ஒலந்திற்கும் இருக்கிறது ஆனால் அவரால் பாவிக்க முடியவில்லை மிகவும் இளகிய மனம் கொண்டவராக இருப்பதால் அவரால் யாரையும் கட்டுப்படுத்தி அதிகாரமிக்க ஆட்சியை வழங்க முடியவில்லை.

ஆனால் மக்கொன் இளங்கன்று பயம் அறியாதது காரணம் இவர் தடைகளை உடைப்பார் என்பதற்கு அடையாளம் இவருடைய திருமணமே..

ஆகவேதான் அடிப்படை மாற்றங்களை செய்ய தயங்காத பண்பு இவரிடம் இருப்பதை காணமுடிகிறது, 77 வயதான அமெரிக்க அதிபர் தன்னைவிட பல வருடங்கள் இளைய மகளுக்கு ஒப்பான மாடல் அழகியை மனைவியாக்கியிருப்பது, தன் மனைவியை விரட்டியடித்து புதிதாக ஒரு மாடல் அழகியை மணமுடித்துள்ள ரஸ்ய அதிபரின் பழக்கங்கள் யாவும் மிகவும் பழமைவாய்ந்த கொள்கைகள், ஆனால் இவர்களை விட மக்கொன் வேறுபடுகிறார்.

இப்படியொரு திருமணத்தை செய்யவும், அதை இன்றுவரை காப்பாற்றி நாட்டின் அதிபராவது வரை அவர் முன்னேறியதும் பெரிய விடயமாகும்..

இதுவரை உலகம் காணாத புதிய தம்பதிகள் மாபெரும் வரலாறு ஒன்றை படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலைகள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer