தற்போது புழக்கத்திலுள்ள 5000 ரூபாய் நோட்டுகளை எவ்விதத்திலும் இரத்துச் செய்யப் போவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயத்தை குறிப்பிட்ட அவர், தற்போது புழக்கத்திலுள்ள 5000 ரூபாய் நாணயத்தாள் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதியை இலக்காக கொண்ட உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது நோக்கமாகும். ஜி.எஸ்.பி பிளஸ் வரிசலுகை கிடைக்கப் பெற்றதும் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment