உடல் எடையைக் குறைக்க கொள்ளு அருமையான உணவாகும். அந்த வகையில் உடலின் கொழுப்பைக் குறைக்க, ஆயுர்வேத முறையில் கொள்ளு சூப் வைப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
கொள்ளு - 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
வரமிளகாய் - 2
செய்முறை
முதலில் கொள்ளை எண்ணெய் ஊற்றாமல் சிவக்க வறுத்து, பூண்டு தக்காளி, மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, அதில் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து, கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவினால் கொள்ளு சூப் தயார்.
குடிக்கும் முறை
ஆயுர்வேத முறையில் தயாரித்த இந்த கொள்ளு சூப்பை தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் குடித்து வந்தால், உடலின் கொழுப்பைக் குறைந்து, சிக்கென்ற உடலமைப்பை பெறலாம்.
Tuesday, May 2, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment