குமுதினப் படகுப் படுகொலைகளின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அதனை நினைவு கூரும் நிகழ்வு நெடுந்தீவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிற்கும்- புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்த 33 பேரை இலங்கைக் கடற்படை கொரூரமாக படுகொலை செய்தது.
நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த குமுதினிப் படகை வழிமறித்த இலங்கைக் கடற்படையினர், குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேரைப் படுகொலை செய்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்கு உள்ளாக்கினர்.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment