Thursday, May 11, 2017

அயர்லாந்து நாட்டில், சுற்றுலாவுக்கு புகழ் பெற்ற தீவில், 30
ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன கடற்கரை, மீண்டும் தோன்றியுள்ளது.
ஐரோப்பாவில், பிரிட்டன் அருகில் உள்ள அயர்லாந்து நாட்டில் உள்ள அச்சீல்
என்ற தீவு, சுற்றுலாவுக்கு புகழ் பெற்றது. இந்த தீவில் உள்ள டோக் கிராமம்
அருகே, 300 மீட்டர் நீள கடற்கரை இருந்தது. 1984ம் ஆண்டு பெரும் புயல்
ஒன்று இந்த பகுதியை தாக்கிய போது டோக் கிராம கடற்கரையில் இருந்த மணல்
முழுவதையும் சிதற அடித்தது. அதன் பிறகு அப்பகுதியில் வெறும் பாறை தான்
காணப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட சீற்றம், பல
ஆயிரம் டன் மணலை மீண்டும் அந்த கடற்கரை பகுதிக்கே கொண்டு வந்து
சேர்த்துள்ளது. இது அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி
உள்ளது. அச்சீல் தீவில் உள்ள சுற்றுலா அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
30 ஆண்டுகளுக்கு முன் இந்த கடற்கரை பகுதியில், ஓட்டல்கள், ஏராளமான கெஸ்ட்
ஹவுஸ்கள் இருந்தன. கடற்கரை மணல் முழுவதும் காணாமல் போனதால் சுற்றுலா
பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கடற்கரை உருவாகி இருப்பது மகிழ்ச்சி
அளிப்பதாக உள்ளது என்றார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer