நைஜீரியாவின் சிபோக் நகரில் இருந்து 2014 ஆம் ஆண்டு போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப் பட்ட 276 பள்ளி மாணவிகளில் மேலும் 82 பேர் அண்மையில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
கடத்தப் பட்ட மாணவிகளைப் பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக போக்கோ ஹராம் போராளிகளின் மிரட்டலுக்கு மத்தியில் நைஜீரிய இராணுவமும் அவர்களைக் கண்டு பிடிக்கத் திண்டாடி வந்தது. இதையடுத்து இந்த முயற்சியில் அமெரிக்க இராணுவமும் உதவி செய்ய முன் வந்தது. இந்நிலையில் அண்மையில் முன்னால் நைஜீரிய ஜனாதிபதி குட்லுக் ஜொனாதன் தலைமையில் நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக சிறையில் உள்ள சில போராளிகளின் விடுதலைக்கு சமனாக 82 மாணவியரைவிடுவிக்க போக்கோ ஹராம் இணங்கியதை அடுத்து அம்மாணவியர் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிக்கும் முயற்சியில் சுவிட்சர்லாந்து அரசும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் பெரும் முயற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது. விடுதலையான 82 மாணவிகளையும் தலைநகர் அபுஜாவில் சந்தித்த நைஜீரிய அதிபர் முஹமது புஹாரி அவர்களின் எதிர்கால நலனுக்கு நைஜீரிய அரசு ஆவன செய்யும் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார். நைஜீரியாவில் போக்கோ ஹராமின் கடும் போக்குத் தனத்தால் கடந்த 8 ஆண்டுகளில் 20 000 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home
»
World News
»
போக்கோ ஹராம் போராளிகளிடம் இருந்து 3 வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவிகளில் மேலும் 82 பேர் விடுதலை
Tuesday, May 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment