Monday, May 8, 2017

பாகுபலி - 2 படமானது இந்தியாவின் ஒட்டுமொத்த திரைப்படத் துறையையே
புரட்டிப் போட்டுள்ளது. இங்கிருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களை
வெகுவாக மிரட்டியுள்ளது.
இனிமேல் திரைப்படங்கள் அனைத்தையுமே பாகுபலிக்கு முன், பாகுபலிக்குப்
பின். என்று பிரிக்கலாம்.இதுவரை ஏழு நாட்களில் 10 ஆயிரம் கோடி ரூபாக்கும்
அதிகமாக வசூலை அள்ளிக் குவித்த இந்தப்படம், பாலிவுட் உலகத்தில் இருக்கும்
"கான்" களின் சாம்ராஜ்யத்திலும், கோலிவுட் உலகங்களில் இருக்கும் "பிளாக்
பஸ்டர்" களிலும் பெரிய பொத்தல்களை, ஓட்டைகளைப் போட்டு விட்டது. பல பல
பால் அபிஷேக, பீர் அபிஷேக நாயகர்களை ஓரம் கட்டிவிட்டது.....!

மிகவும் திறமையாகவும், நளினமாகவும் இந்தப் படத்தை எடுத்து, ஒரு சாதாரண
ஹிந்துக் குடிமகன் தன்னுடைய சரித்திரத்தைப் பற்றியும், கலாச்சாரத்தைப்
பற்றியும் கொண்டிருந்த தப்பான எண்ணவோட்டத்தையே மாற்றியுள்ளார்
திரு.ராஜமௌலி. தற்போது இந்தப் படம் ஒரு சரித்திரத்தையே மாற்றி அமைத்ததுமில்லாமல்,
தவறான புரிந்துணர்வைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

ஆரியன் திராவிடன் என்றெல்லாம் கதை விட்டு.... கடைசியில் பிராமண குலத்தில்
பிறந்த ராவணனை ராமரின் எதிரி என்கிற ஒரே காரணத்துக்காக திராவிட அரசனாக
இனம்கண்ட அரசியல்வாதிகள்தானே தமிழ்நாடு முழுவதும்...! அவர்கள் ஆதரவில்
எடுக்கும் படங்களும் அப்படித்தான் இருக்கும்....!
பாகுபலியின் மனைவியாக வரப்போகும் தேவசேனாவை ஒரு வீரம் மிகுந்த, ஆற்றல்
நிறைந்த, சாதுர்யமான பெண்ணாகச் சித்தரித்து பாரதநாட்டில் பெண்கள் எப்படி
இருந்திருக்கிறார்கள் என்பதை விளக்கியுள்ளார்.

அதே போல "மகிழ்மதி பேரரசின்" திருமணத் திட்டத்தை தகுந்த காரணங்களுடன்
நிராகரித்து, அக்காலப் பெண்களின் சுதந்திரத்தையும் கூறியுள்ளார்கள்.
தவறான எண்ணத்தில் தொட முயன்ற சேனாதிபதியில் கை விரல்களை
வெட்டியதாகட்டும், பாகுபலியின் தோளின் மீது நடந்து படகை அடைந்ததாகட்டும்
பெண்மையை, அவர்களுக்கு ஆண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உறுத்தாமல்
சொல்லியிருக்கிறார்கள்.

நம் சனாதன தர்மத்தை சாஸ்வத தர்மம் என்றும் கூறுவதன் காரணம், தர்மத்தைக்
காக்க வேண்டும் என்று வரும் பொழுது அங்கே தாய், தந்தை, அண்ணன்... ஏன்
குருவே வந்தாலும் அவருக்கும் இடம் கிடையாது என்பதே. அதைத் தான்
செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பதற்காக அமரேந்திர பாகுபலி எடுக்கும்
முடிவு உணர்த்துகிறது. "கதைகளை" வைத்து நடத்தும் சண்டையில் ஏற்கனவே நாம்
நம் மனக்கண்ணால் அனுபவித்த மஹாபாரதக் காட்சியை நினைவு கொள்கிறோம்.

அதி மேதாவிகளும், அன்னியக் கைக்கூலிகளும் நம் இதிகாசங்களை, சரித்திரங்களை
வேண்டுமானால் தவறாகப் புரிந்துகொண்டு தவறாகவே நம் மக்களுக்கு போதிக்க
ஏற்பாடு செய்திருக்கலாம். ஒரே ஒரு நிகழ்வு, ஒரே ஒரு சினிமாவின் மூலமாக
இவர்களால் நம் மண்ணிலிருந்து சனாதன தர்மத்தைப் பிரிக்கவே முடியாது என்பது
இந்தப் படத்திற்கு இருக்கும் வரவேற்பு புரியவைக்கும்.

பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்டிராவிட்டால், நாம் கையில் கத்தியுடன்
மாட்டுவண்டியில் பிரயாணித்துக் கொண்டிருப்போம் என்று நினைக்கும்
அதிமேதாவிகளுக்கு, பல பல அரசர்களின் அரசியலமைப்பு முறையை தெளிவாகச்
சொல்லியுள்ளார் ராஜமௌலி. கடைசி காட்சியில் பயன்படுத்திய டெலஸ்கோப்
காட்சியை இப்போதும் கர்நாடகாவில் உள்ள ஹம்பிக்குச் சென்றால், அந்நியரின்
படையெடுப்பின் மிச்சம் மீதியாக உள்ள விஜயநகர பேரரசு பயன்படுத்திய
பின்ஹோல் கேமராவை "விருபாக்ஷி கோவிலில்" பார்க்கலாம்.

மொத்தத்தில் ஒவ்வொரு ஹிந்துவும் பெருமைபட்டுக் கொள்ள ஏதுவான இந்த
ராஜமௌலியின் படம் சினிமா உலகில் ஒரு மைல் கல்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer