Sunday, May 7, 2017

ஹரி இயக்கத்தில் வெளிவந்த 'சிங்கம் 3' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது சாமி 2 ஆம் பாகத்தை இயக்க ஹரி தயாராகிவிட்டார். இதில் ‘சாமி’யின் முதல் பாகத்தில் நடித்த விக்ரம், த்ரிஷாவே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிபு தமீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். மேலும் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் தான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘துருவநட்சத்திரம்’ மற்றும் விஜய்சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் கூடிய விரைவில் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.மேலும் கூடுதல் சிறப்பம்சமாக மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி சமீபத்தில் வெளிவந்துள்ளது. கீர்த்தி சுரேஷ்... விக்ரமுடன் ஜோடி சேர்வது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer