காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. விடயம் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இராணுவத்தினர், மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளை அகற்றிச் சென்றுள்ளனர்.
இராணுவத்தினர் குறித்த செயற்பாடு மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, இராணுவத்தினரின் மேற்கண்ட அத்துமீறல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யுத்த காலத்தில் பலரும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மோட்டார் சைக்கிள்களாக இவை இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் பிடியிலிருந்த இடங்களில் காங்கேசன்துறையும் உள்ளடங்கும். சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது. அங்கு மீள்குடியேறச் சென்றவர்கள் தமது கிணறுகளைத் துப்புரவு செய்தபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மற்றொரு மோட்டார் சைக்கிளின் பாகங்களையும் மீட்டுள்ளனர். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் அங்கு செல்வதற்கு முன்னர் அங்கு விரைந்த இராணுவத்தினர் என்று கூறியவர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகளைப் பிடுங்கிச் சென்றுள்ளனர். அதன் பின்னரே பொலிஸார் அங்கு சென்று பார்வையிட்டுச் சென்றனர் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Home
»
Sri Lanka
»
காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட கிணற்றிலிருந்து 2 மோட்டர் சைக்கிள்கள் மீட்பு!
Saturday, May 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment