Tuesday, May 16, 2017

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க
முயன்ற புகாரில் கைதான டிடிவி.தினகரனின் நீதிமன்ற காவல் வரும் 29ம்
திகதிவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார்
என்று இடைத்தரகர் சுகேஷ் மற்றும் டிடிவி.தினகரன் இருவரும் கைது
செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டு
உள்ளனர்.இவர்களின் நீதி மன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில்,குரல்
மாதிரி பதிவு செய்ய வேண்டும் என்று சுகேஷ் தரப்பில் கோரிக்கை
வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதோடு, இருவரையும் தற்போது ஜாமீனில் வெளியில் விட்டால் அவர்களுக்கு
பாதுகாப்பு இல்லை,உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதாலும்
டிடிவி.தினகரன் மற்றும் சுகேஷ் இருவரின் நீதிமன்ற காவலை வருகிற 29ம்
திகதிவரை நீட்டித்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer