Monday, May 29, 2017

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சவால்களில் வெற்றி கிட்டும் நாள்.
 
ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்: மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பு களையும் ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தங்கும் நாள்.

கடகம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டாரத்தில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.
சிம்மம்

சிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். இனிமையான நாள்.

கன்னி: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந் தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார் கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவு
கள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். லேசாக தலைவலி, வயிற்றுவலி வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

தனுசு: குடும்பத்தில் ஆரோக்யமான விவா தங்கள் வந்து போகும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

மகரம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ் வீர்கள். வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer