Sunday, May 28, 2017

மேஷம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.
 பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கடகம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கன்னி
சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்
மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

விருச்சிகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

மகரம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

கும்பம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

மீனம்
நட்பு வட்டம் விரியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே.

1 comments :

 
Toggle Footer