Friday, May 26, 2017

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவா கும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோ கத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.  

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில காரியங் களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மிதுனம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவா கப் பேசப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலித மாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். மனைவி வழி யில் உதவிகள் கிடைக்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத காரியங்கள் முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சி யில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். சிறுசிறு ஏமாற்றம் வந்து நீங்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத் தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளி யிட வேண்டாம். தர்மசங்கடமான சூழல் களை சமாளிக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமை யாக நம்புவார். நன்மை கிட்டும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத் தில் மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத் தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள்.

மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். உறவினர்கள் மதிப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி

0 comments :

Post a Comment

 
Toggle Footer