Tuesday, May 16, 2017

ஒருவர் ரகசியமாக கொடுத்த தகவலைத் தொடர்ந்து, கார் உற்பத்தி நிறுவனங்களான
ஹுண்டாய் மற்றும் கியா மோட்டர்ஸ் ஆகியவற்றிடம் சுமார் 2.4 லட்சம் கார்களை
திரும்பப்பெற தென் கொரிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதிப்படைந்துள்ளதாக சொல்லப்படும் கார் மாடல்களில் ஹுண்டாய் ஐ30
ஹேட்ச்பேக், சோனாட்டா, ஜெனிசிஸ் மற்றும் கியாவின் மேஹாவி, கார்னிவல் ஆகிய
மாடல்கள் அடங்கும்.இந்த மாடல்கள் மற்றும் பிற மாடல் கார்களில், வெற்றிட
குழாய்கள், எரிபொருள் குழாய்கள் மற்றும் பார்க்கிங் பிரேக் லைட்
ஆகியவற்றில் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவைத்தவிர, பல
குறையுள்ள பாகங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே என்ஜின் திடிரென நிற்கும் கோளாறு தொடர்பாக கடந்தமாதம் தென்
கொரியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் கார்களை
மாற்றித்தர ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனம் முன் வந்திருந்த நிலையில்,
தற்போது இந்த 2.4 லட்சம் கார்களும் எண்ணிக்கையில் இணைந்துள்ளன.

0 comments :

Post a Comment

 
Toggle Footer